Saturday 8 June 2013

சென்னையில் 20 பள்ளிகளை மூட உத்தரவு



             சென்னையில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 20 மழலையர் பள்ளிகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் . சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்: குழந்தைகளுக்கான  
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோரிடம் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வந்த 20 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறாத காரணத்தை கேட்டு மூன்று முறை அறிவிப்பு அனுப்பட்டும், அங்கீகாரம் பெறவும் கருத்துரு அனுப்பவும் முயற்சி செய்யப்படவில்லை. இப்போது கோடை விடுமுறை முடிந்து 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி இந்த பள்ளிகள் மூடப்படுகின்றன. மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் அவற்றின் முகவரிகள் அடங்கிய பட்டியல், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலங்களின் அறிவிப்பு பலகையிலும் பெற்றோர்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளது.இந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவேண்டாம் என்று அந்த அறிவிப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment