Saturday 8 June 2013

கால்நடை மருத்துவ படிப்பு: தரவரிசை பட்டியல் 24ல் வெளியீடு

             கால்நடை மருத்துவ படிப்பு, மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல், 24ம் தேதி வெளியாகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (பி.வி.எஸ்சி.,) மீன் வள
அறிவியல் (பி.எப்.எஸ்சி.,) உணவு தொழில்நுட்பம் (பி.டெக்.,) கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் (பி.டெக்.,) உள்ளிட்ட, இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளுக்கு மொத்தம், 360 இடங்கள் உள்ளனஇப்படிப்புகளுக்கான விண்ணப்ப விற்பனை, மே, 15ம் தேதி துவங்கி, 31ம் தேதி முடிவடைந்தது. இந்தாண்டு, மொத்தம், 15,796 விண்ணப்பங்கள் விற்பனையானது. கடந்தாண்டை விட, இந்தாண்டு விண்ணப்ப விற்பனை, 63 சதவீதம் அதிகரித்துள்ளது.

                           இதுகுறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் பிரபாகரன் கூறியதாவது: மாணவர்களின் விண்ணப்பங்கள், விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல்www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில், 24ம் தேதி வெளியிடப்படுகிறதுபுதிதாக துவங்க உள்ள, இரண்டு கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூலை மாதம் நடைபெறும். இவ்வாறு பிரபாகரன் கூறினார்.

No comments:

Post a Comment