Friday 14 June 2013

484 மதிப்பெண்கள் பெற்றவர்களை மட்டுமே நாமக்கல் கிரீன்பார்க் மற்றும் குறிஞ்சி போன்ற பள்ளிகள் சேர்த்துக் கொள்கின்றன என விகடன்

             இது ஒரு சிறிய மோசடி தான். வெளிவராத இன்னும் பல மோசடிகள் பல தனி யார் பள்ளிகளில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. மாநில அளவில் ரேங்க் வாங்கும் பள்ளிகளை கவனித்தீர்கள் என்றால் தேர்வு
மையங்கள் அந்தந்த பள்ளிகளிலேயே உள்ள பள்ளிகள் தான் மாநில அளவிலான ரேங்க் பெறுகிறார்கள். காரணம் என்ன? பத்தாம் வகுப்போ பனிரெண்டாம் வகுப்போ அந்தந்த வருடங்களில் நடத்தப்படாமல் ஏறத்தாழ ஒன்றேமுக்கால் வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பாடங்களை மாணவர்களை உரு அடிக்க செய்கிறார்கள் பாவிகள். ஆனால் எந்த அரசுப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பாடம் பதினொன்றாம் வகுப்பிரலேயே தொடங்கப்படுகிறது? எங்கும் இல்லை. இது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் இல்லையா? அநீதி இல்லையா? இதை யார் தட்டிக் கேட்பது?
                           பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அரசுப் பணிகளில் உள்ள உயர் உயர் அலுவலர்களும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தான் முதன்மை பங்குதாரர்களாக உள்ளனர். அரசுக்கு இது தெரியாதா? அரசு ஊழியர் வேறு எந்த வருமானமும் ஈட்டக் கூடாது என்று அரசு விதியே உள்ளபோது அரசாங்க ஆசிரியர்களே அரசுக்கு எதிராக தனியார் பள்ளிகளை நடத்தும் போது அரசுப்பள்ளிகளில் கல்வித் தரம் எங்கு இருக்கும்? ஏன் அவர்கள் மேல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை? பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் பணிபுரியும் அரசுப் பள்ளிகளில் பாடமே நடத்துவதில்லை. தனியார் பள்ளிகளில் போய் தனி ஊதியம் வாங்கிக் கொண்டு மிகவும் உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனசாட்சி இல்லாத மன்னிக்க முடியாத துரோகிகள். அரசாங்கம் இவர்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
                           
இந்த வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளின் போது தனியார் பள்ளிகளில் பங்குதாரர்களாய் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணியே வழங்கப்படவில்லை. இப்படி வெளிப்படையாய் பங்குதாரர்களாய் உள்ள அரசாங்க ஆசிரியர்கள் மீது ஏன் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது?
                             
தேர்வு மையம் தங்கள் பள்ளிகளிலேயே உள்ள தனியார் பள்ளிகள் 2012 பொதுத் தேர்வில் நாமக்கல் கந்தம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்றும் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்றும் மாணவர்களுக்கு பிட் கொடுத்து கையும் களவுமாய் பிடிபட்டு உள்ளது. இந்த வருடம் நாமக்கல் சேலம் ரோட்டில உள்ள ஒரு தனியார் பள்ளி கையும் களவுமாய் பிடிபட்டு உள்ளது. இவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
1.
தனியார் பள்ளிகளுக்கு தேர்வு மையங்கள் வழங்கப்படக் கூடாது. அனைத்து மாணவர்களும் டிஎன்பிஎஸ்சி மற்றும் வங்கித் தேர்வுகள் போல அரசாங்கப் பள்ளிகளிலேயே பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
2. +1
வகுப்பிற்கும் பொதுத் தேர்வு நடத்திட வேண்டும்.(வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் ரகசியம் தெரியும்)
3.
தனியார் பள்ளிகளில் பங்குதாரர்களாய் உள்ள அரசு ஆசிரியர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
4.
தனியார் பள்ளிகளுக்கு பாடம் நடத்த ஓடும் மனசாட்சி இல்லாத துரோகிகளான அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்டறிந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்திட வேண்டும்.
             
இவைகளை மட்டும் இந்த வருடம் செய்தாலே எலிக் குட்டி வெளியே வந்து விடும். இவைகளை விட முக்கியமான விசயம். பெற்றோர்கள் மதிப்பெண் வெறி பிடித்து அலைந்து இது போன்ற தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதை நிறுத்திட வேண்டும். 1000 மாணவர்களிடம் பணம் வாங்கி இலவசமாய் 100 மாணவர்களுக்கு சொல்லித் தரும் ஏமாற்றுக்காரர்களிடம் உஷாராய் இருக்கவேண்டும்
.

No comments:

Post a Comment