Friday 14 June 2013

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிரிவு வாரியாக எம்.பி.பி.எஸ். இடங்கள்



             தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம், 2,145 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், 322 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, மீதமுள்ள, 1823 இடங்கள், வரும், 19ம்
தேதி துவங்கும் பொது கலந்தாய்வு மூலம், நிரப்பப்பட உள்ளன. இவை தவிர, ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில், மாநில ஒதுக்கீடாக உள்ள, 85 பி.டி.எஸ்., இடங்களும், முதல்கட்ட கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ளப்படும். மேலும், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடான, 909 பி.டி.எஸ்., இடங்களும், கலந்தாய்வில் நிரப்பட உள்ளனதனியார் கல்லூரிகளில் பிரிவு வாரியாக உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் குறித்த விவரம், ஓரிரு நாளில் வெளியிடப்படும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment