Monday, 24 June 2013

அரசு நிர்ணயித்த கல்விக்கட்டண விவரத்தை தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல்


                  அரசு நிர்ணயித்த கட்டணத்தை கல்விக்கட்டணம் விவரத்தை தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகையில் பலகையில் ஒட்ட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கல்வி கட்டணம்
                        சேலம் மாவட்டத்தில் உள்ள சி.பி.எஸ்..,
மெட்ரிக், நர்சரி, பிரைமரி, அரசு நிதி உதவிபெறும், சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 361 பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணம் அடங்கிய கடிதம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சேலம் ஹோலிகிராஸ் பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர் முகமது கலீல் முன்னிலை வகித்தார். இதில் பள்ளியின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
அறிவிப்பு பலகையில்
                          நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அதிகாரி ஈஸ்வரன் பேசியதாவது: கல்வி நிறுவனங்கள் சமூக சேவை செய்ய வேண்டும். அரசு நிர்ணயித்த கல்வி கட்டணங்களின் விவரத்தை அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும். இந்த கட்டணத்தை விட மாணவர்களிடம் அதிகமாக வசூலித்தால் அதை திருப்பி கொடுக்க வேண்டும். இதே நேரத்தில் குறைவாக வசூல் செய்திருந்தால் மாணவர்களின் பெற்றோரை அழைத்து எடுத்து கூறி மீதியுள்ள கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் பின்பற்றி இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் எவ்வளவு பேர் இந்த முறையில் விண்ணப்பித்துள்ளனர், அதில் எத்தனை பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விபரத்தை தயாராக வைத்திருக்க வேண்டும். தற்போது தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் பல்வேறு சட்டங்கள் இருப்பதால் யாரும் தவறு செய்ய முடியாது.
அடிப்படை வசதிகள்

                             அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தயங்க மாட்டோம். இதேபோல் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி வரும் ஆட்டோக்கள் பதிவு பெற்றுள்ளனவா? அதில் எத்தனை குழந்தைகள் ஏற்றி வரப்படுகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு தியானம், யோகா போன்ற வகுப்புகள் நடத்த வேண்டும். அப்போது தான் அவர்களது முழு திறமையும் வெளிக்கொண்டு வர முடியும். மாணவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் ஆரோக்கியமாக இருந்தால் தான் அவர்கள் முழு திறமையுடன் கற்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment