Monday 10 June 2013

எஸ்.எஸ்.எல்.சி - சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தனித்தேர்வு


                             எஸ்.எஸ்.எல்.சி., சிறப்பு துணைத்தேர்வு எழுத, அறிவிக்கப்பட்ட கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிடமிருந்து "சிறப்பு அனுமதி திட்டத்தின்" கீழ்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்
* மார்ச், 2013ல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ எழுதியிருக்க வேண்டும்.
* மார்ச் 2013ல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெறாத, கலந்துகொள்ளாத தேர்வர்கள், தோல்வியுற்ற மற்றும் கலந்துகொள்ளாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
* மார்ச் 2013 தேர்வில் பள்ளி மாணவர்கள் மற்றும் நேரடி தனித்தேர்வர்கள், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சிக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்கள், பதிவுசெய்து பயிற்சி வகுப்பிற்கு செல்லாதவர்கள், பயிற்சி வகுப்பிற்கு சென்று பயிற்சி பெற்று, செய்முறைத் தேர்வுக்கு வருகை புரியாதவர்கள் என அனைத்து நிலைத் தேர்வர்களும் சிறப்பு துணைத் தேர்வு திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பழைய பாடத்திட்டத்தில், ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள், மார்ச் 2013, தேர்வினை புதிய பாடத்திட்டத்தில் எழுதி, அதில், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யாததால், அறிவியல் பாட கருத்தியல், செய்முறை தேர்வெழுத முடியாதவர்களும், தற்போது தட்கல் திட்டத்தில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
* மார்ச் 2013 தேர்வில், ஓரிரு பாடங்களில் மட்டும் தேர்வெழுதி, இதர பாடங்களில் தேர்வெழுதாதவர்களும், தேர்வுக்கு அனுமதிக்கப்படாதவர்களும்(அறிவியல் பாடம் உள்பட) சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
* மார்ச் 2013 தேர்வில், அறிவியல் பாடத்தில் தியரி தேர்வை மட்டும் எழுதி, செய்முறை தேர்வை எழுதாதவர்கள், தற்போது அறிவியல் பாடத்தில் தியரி தேர்வில் தேறியிருந்தாலோ அல்லது தோல்வி அடைந்திருந்தாலோ, அவர்கள் ஜுன் 2013 சிறப்புத் துணைத் தேர்வில் தியரி மற்றும் செய்முறைத் தேர்வு இரண்டினையும் எழுத வேண்டும்.

                விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் வழிமுறைகள் குறித்து தெளிவாக அறிந்துகொள்ள www.dge.tn.gov.in. என்ற இணையதளம் செல்க.

No comments:

Post a Comment