Monday 25 February 2013

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் 1.6.2009 க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களை வைத்து ஏன் கோரிக்கை வைக்கிறது என்பதற்கான விளக்கம்.



                        அனைவருக்கும் வணக்கம். எங்கள் சங்கம்  இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்றுத்தருவதில் அதிக அக்கறையுடன் செயல்படுவதை சமீபத்தில் எங்கள் சங்கம் பெற்ற RTI தகவல்கள், மற்றும் நிதிதுறையிடம் இருந்து
பெறப்பட்ட கடிதங்களை நமது நண்பர்களின் இணையங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். தற்போது (‎01.06.2009 )க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வந்துள்ள தகவலை பார்த்து 1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் பாதிப்பா ? எல்லோரும் தானே  GRADE PAY 2800 வாங்குகிறோம் என கேட்கின்றனர். அவர்களுக்கு விளக்கமளிக்க விரும்புகிறேன். கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.
                          அரசாணை 234 வெளிவந்தபோது தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்திற்கு வந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு புதிய ஊதியமானதுஅவர்கள் முன்பு பெற்றுவந்த ஊதியத்தை விட குறைவாக இருந்தது. இவ்வாறான் நிலை இடைநிலை ஆசிரியர்களுடன்  சேர்த்து மொத்தம் மூன்று ஊதிய பிரிவினருக்கு மட்டும் ஏற்ப்பட்டது. இதனை நம் முன்னோடி சங்கங்கள் தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்ப்பட்டிருக்கும். மாறாக 1.6.2006 க்கு  பின்னர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் புதிய ஊதியமானது அவர்கள் பெற்று வந்த ஊதியத்தை விட குறைவாக உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு மிகைப்படுத்தி தகவல் தந்து கோரிக்கை விடுத்தனர்
                              அதன் விளைவு அரசாணை 258. சங்கங்கள் சொன்னதாக இந்த அரசாணையில் உள்ளது. யாரும் நாங்கள் அப்படி சொல்லவில்லை, இப்படி சொல்லவில்லை என்று மறுக்க முடியாது. இதன் விளைவு 1.6.2006 லிருந்து 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 முறை வந்தது. இதை விளக்கினால் விளக்கிக்கொண்டே போகலாம்அரசாணை 234 வெளிவந்தபோதே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முறையாக அரசுக்கு முன்வைக்கவில்லை நம் முன்னோர்கள். இதன் தொடர் பாதிப்புதான் 1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 5200 + 2800 +750.  1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆறாவது ஊதிய குழு வராமல் இருந்தாலே அதாவது முந்தைய ஊதிய விகித ஊதியமே அதிகமாக இருந்திருக்கும். இடைநிலை ஆசிரியர்களின் பாதிப்பை அரசுக்கு எடுத்துக்காட்ட இவர்களையே முன்வைத்து பாதிப்பை முன்வைக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.  இவர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்படுத்த அரசு முன்வரும்போது அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களுக்கும் முறையான ஊதிய மாற்றம் வரும்.
                         எங்கள் சங்கம் சார்ந்த முயற்சிகளின் விவரங்களை அறிந்து கொள்ள உங்கள் - மெயில் முகவரியைcthomastata@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்கு தொகுப்புகளை அனுப்புகிறோம். பொறுமையாக படித்ததற்கு நன்றி.
உங்கள் நண்பன் C.T. ROCKLAND. DEPUTY GENERAL SECRETARY, TAMILNADU ALL TEACHER ASSOCIATION.    

No comments:

Post a Comment