டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க 7-ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இங்கு படிக்கத் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் படிப்புக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை தமிழக அரசின் கல்வி உதவித் தொகையும் கிடைக்கும். டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவக்
கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் தேதியன்று பதினொன்றரை வயது நிரம்பியவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2-1-2001க்கு முன்னதாகவும் 1-7-2002க்குப் பின்னரும் பிறந்திருக்கக் கூடாது. வயது வரம்பில் விலக்கு அளிக்கப்பட மாட்டாது. ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும்போது, அந்த மாணவர் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.

இந்தக் கல்லூரியில் வரும் ஆண்டில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தேர்வு வருகிற ஜூன் 1, 2 தேதிகளில் நடைபெறுகிறது. சென்னையிலும் இத்தேர்வை எழுதலாம். ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகியவற்றிலிருந்து எழுத்துத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும். கணிதம், பொது அறிவு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அக்டோபர் 7-ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு, முந்தைய வினாத்தாள் தொகுப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு கமாண்டண்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பதிவுத் தபால் மூலம் விண்ணப்பப் படிவங்களைப் பெற விரும்பும் பொதுப் பிரிவினர் ரூ.400க்கும் ஸ்பீட் போஸ்ட் மூலம் பெற விரும்புபவர்கள் ரூ.450க்கும் டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் பதிவுத் தபால் மூலம் விண்ணப் படிவங்களைப் பெற விரும்பினால் ரூ.355க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். ஸ்பீட் போஸ்ட் மூலம் பெற விரும்பினால் ரூ.405க்கு டிமாண்ட் டிராப்ட் பெற வேண்டும். இதுகுறித்த விரிவான விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வழங்கப்பட மாட்டாது. ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக), ‘தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பிரேசர் பாலச் சாலை, விஓசி நகர், சென்னை 600 003 என்ற முகவரிக்கு மார்ச் 31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்களுக்கு: www.tnpsc.gov.in
No comments:
Post a Comment