Wednesday 27 February 2013

தேர்வு நேரத்தில் ஜெனரேட்டர் நிதி கேட்டு அதிகாரிகள் கடிதம்



               மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் துவங்குகின்றன. மின்வெட்டை சமாளிக்க, தேர்வு மையங்களில், ஜெனரேட்டர் உபயோகத்திற்கான நிதி கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். மின்வெட்டை சமாளிக்க, தேர்வு மையங்களில்
ஜெனரேட்டர் பயன்படுத்த, அரசு, ஏற்கனவே உத்தரவிட்டது. கல்வி மாவட்டம் வாரியாக, தேர்வு மையங்களை கணக்கிட்டு, ஜெனரேட்டர் ஏற்பாடு செய்ய, பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான நிதி கேட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "அரசின் உத்தரவுப்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு, ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
                               
கிராமப்புற மையங்களுக்கு ஜெனரேட்டர் எடுத்துச் செல்வதால், கூடுதல் செலவாகும். பள்ளிக்கல்வித் துறையில் இருந்து நிதி வர தாமதமாகும் பட்சத்தில், பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளோம்" என்றனர்
.

No comments:

Post a Comment