Friday 22 February 2013

கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும் குழந்தைகளின் கல்வியின்பால் அரசு காட்டும் அக்கறை



                         கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும் குழந்தைகளின் கல்வியின்பால் அரசு காட்டும் அக்கறை மற்றும் இச்சமூகத்தின் எதிர்கலமே குழந்தைகள்தான் என்ற நம்பிக்கையில் கல்விக்கான முழூ செலவையும் அரசே ஏற்றுள்ளது. தொடர்ச்சியன ஆசிரியர் நியமனம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதி
போன்றவற்றை பார்க்கும் போது இன்றைய ஆட்சி குழந்த்தகளுக்கு பொற்கால ஆட்சி என்றே கூறலாம். ஆனால் இதை செயல்படுத்தும் ஆசிரியர் உள்ளிட்ட அமைப்பினர் அனைவருக்கும் கல்வி இயக்க நிதியை கையாளும் விததினை பார்க்கும் போது அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட அதிகாரிகள் செய்யும் தவறுகளால் வட்டார அதிகாரிகள் செய்யும் தவறுகளை தட்டிகேட்க முடிவதில்லை.(பண மோசடியில் ஈடுபட்ட எஸ்.எஸ்.., அதிகாரி "சஸ்பெண்ட்' பிப்ரவரி 27,2012, dinamalar news) இதனால் பள்ளி தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை வட்டார அதிகாரிகள் தட்டிகேட்க முடிவதில்லை. அரசு கோடிக்கனக்க்கான பணத்தை கொட்டினாலும் இந்த சங்கிலித்தொடர் ஊழலே "கல்விக் கணக்கெடுப்பு ஆண்டறிக்கை - 2011' – படி தொடக்கக் கல்வி வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது
                         
அனைவருக்கும் கல்வி இயக்கம் - கருத்தாய்வு மையங்களில் நடைபெறும் பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் இதர பயிற்சிகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் ஆகியவற்றிற்கான அரசு செய்யும் செலவுகள் இதில் கையாடல் அதிகம் நடைபெறுகிறது. அரசின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.சென்றாண்டு ஒரு நபருக்கு 600 செலவில் பள்ளிக்கு ஆறு பேர் வீதம் மேளாண்மை குழு உறுபினர்களுக்கு பயிற்சி, இந்தண்டு ஒரு நபருக்கு 300 செலவில் பள்ளிக்கு ஆறு பேர் வீதம் மேளாண்மை குழு உறுபினர்களுக்கு பயிற்சி.
                     
இவ்வகை பயிற்சிக்கான அனைத்து செலவுகளும் ஒதுக்கப்டும் வகைவரியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியும்படி இருந்தால் பயிற்சியின் மீது பயிற்சியாளர்களுக்கு அக்கறை ஏற்படும். ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தால் ஊழல் குறையும் கீழ்க்கண்ட நடைமுறைகள் செயல்படுத்தினால் ஊழல் குறையும். பள்ளியளவில் செய்யப்படும் செலவுகளினை கண்காணிக்க கல்விக்குழு இருப்பதைப்போல் வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினை அமைக்கவேண்டும்.
                           
ஒவ்வொரு பயிற்சியின் தொடக்கத்திலேய பயிற்சிக்கான செலவுகளுக்கு (சில்லறை செலவுகள் உட்பட) ஒதுக்கப்ட்ட நிதியினை பயிற்சியாளர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். பயிற்சிகுபின் பய்ற்சிக்காக செலவிடப்பட்டசெலவிங்களை பயிற்சியாளர் முன்னிலையில் வாசிக்க வேன்ண்டும். பயிற்ச்சிகள் மற்றும் இதர செலவினகளுக்கான மாநில திட்ட இயக்குனர் வெளியிடும் அனைத்து வழிகாட்டும் நெறிமுறைகளும் ஆசிரியர்கள், வளமைய ஆசிரியர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் தெரியவேண்டும். கருத்தாய்வு மையங்களில் (வட்டார & மாவட்ட அளவில் ) நடைபெறும் பயிற்சிக்கான மற்றும் இதர செலவுகளை வகைவரியாக பொதுமக்களின் பார்வையில் படும்படி வட்டார & மாவட்ட அளவில் வைக்கவேண்டும். ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தால் மட்டுமே ஊழல் குறையும். செலவினங்களுக்காக வைக்கப்படும் வவுச்சர்களின் உண்மைத்தன்மைகளை அனைவருக்கும் (பள்ளி ஆசிரியர்கள், வளமைய ஆசிரியர்கள்,கல்விக்குழு உறுப்பினர்கள்) தெரியும்படி சோதிக்கவேண்டும்

No comments:

Post a Comment