Tuesday 26 February 2013

பி.டி.எஸ்., மாணவர்களுக்கு தனி தேர்வு நடத்த கோரிக்கை



               தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனித் தேர்வு நடத்த, அரசு ஆவன செய்ய வேண்டும் என, ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படாத, பி.டி.எஸ்., மாணவர்கள் கோரி உள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு பல் மருத்துவ மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலர்
அருளப்பராஜ் கூறியதாவது: இம்மாதம், 1ம் தேதி முதல், பி.டி.எஸ்., பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, ஆண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. இத்தேர்வில் பங்கேற்க, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் இயங்கும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், 10 கல்லூரிகளைச் சேர்ந்த, 92 மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
                              இவர்களில், 40 பேர், பி.டி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள். தேர்வு எழுத போதுமான வருகைப் பதிவேடு உள்ளிட்ட தகுதிகள் இருந்தும், 92 மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படாதது குறித்து, கூட்டமைப்பின் சார்பில், முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்தோம். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டோம். இதுவரை, இம்மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லைஇம்மாதம், 28ம் தேதியுடன், தேர்வுகள் முடிவடைகின்றன. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இம்மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அருளப்பராஜ் கூறினார். குறிப்பிட்ட மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படாததற்கு, உரிய காரணங்கள் இருக்கும் என, மருத்துவப் பல்கலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment