Saturday 23 February 2013

கல்விச் சேவைக்காக விருதுபெறும் பேராசிரியர்



             திருச்சி என்..டி.டி., பேராசிரியரின் கல்வி சேவையைப் பாராட்டி தி இந்தியன் இன்டர்நேஷனல் பிரன்ட்ஷிப் சொசைட்டி, "சிக்ஷா ரட்டன் புரஸ்கர்" பட்டத்தை வழங்கியது. திருச்சி தேசிய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கோபி. இவர் தொழில் நுட்பத்துறையில் நான்கு நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின்
கல்விச் சேவையைப் பாராட்டி, புதுடில்லி இந்திய இன்டர்நேஷனல் சென்டரில் நடந்த பொருளாதார வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயணசிங் "சிக்ஷா ரட்டன் புரஸ்கர்" விருதையும், ஜார்கண்ட் முன்னாள் கவர்னர் சயித் சிப்டி ரஷி "குளோரி ஆப் இந்தியா கோல்ட் மெடல்" விருதையும் வழங்கினர். இவர் எழுதிய புத்தகங்கள், கேம்பிரிட்ஜ் மஸ்ஸசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அமெரிக்க கல்வி நிறுவன நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment