Monday 25 February 2013

டி.இ.டி தமிழ் வினா - விடை: புறநானூறு:


புறநானூறு = புறம் + நான்கு + நூறு.
தமிழர்களின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல்.
இந்நூல் புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
அதியமானின் நண்பர் - ஔவையார்.
சங்கப்புலவர்களில் ஒருவர் - ஒளவையார்.
நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார்.

சங்ககால பெண் கவிஞர்களில் அதிகப்பாடல் பாடியவர் - இவரும் ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் வேறுவேறானவர்.
ஔவை என்பதன் பொருள் - தாய்.
பாடல் வரிகள்:
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே - ஔவையார்
**  பொருள்: அவல் - பள்ளம், மிசை - மேடு, நல்லை - நன்றாக இருப்பாய்.
திண்ணையை இடித்து தெருவாக்கு என்ற பாடலை இயற்றியவர் - கவிஞர் தாராபாரதி. இவர் எழுச்சிமிக்க கவிதைகளை எழுதுவதில் வல்லவர். ஆசிரியராக பணியாற்றியவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்றவர்.
காலம்: 26.02.1947 - 13.05.2000
பிற நூல்கள்: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள்.
பாடல்வரிகள் சில: "கடலின் நான் ஒரு முத்து"
எத்தனை உயரம் இமயமலை- அதில்
இன்னொரு சிகரம் உனதுதலை"
பூமிப்பந்து என்ன விலை? -உன்
புகழைத் தந்து வாங்கும் விலை!

No comments:

Post a Comment