Monday 25 February 2013

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்:


பிறப்பு: இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் எனும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் நாள் பிறந்தார்.
பெற்றோர்: தந்தை- உக்கிரபாண்டித்தேவர். தாய் - இந்திராணி. இஸ்லாமிய பெண்மணி இவருக்கு பாலூட்டி வளர்த்தார். இவருடைய ஆசிரியர் - குறைவறவாசித்தான்
பிள்ளை.
தொடக்கக்கல்வி - கமுதியில் கிருஸ்தவ பாதிரியார்களிடம் - பசுமலை உயர்நிலைப்பள்ளி(மதுரை) - 10ம் வகுப்பு ராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில். இராமநாதபுரத்தில் பரவிய பிளேக் நோயால் இவரது கல்வி நின்றது. தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் வல்லவர். சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், ஜோதிடம், மருத்துவம் ஆகியவர்றை கற்றறிந்தார்.
முத்துராமலிங்கத்தேவர் எத்தனை சிற்றூர்களில் இருந்த தம் சொந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கினார் - 32 சிற்றூர்களில் இருந்த நிலங்கள்.
முத்துராமலிங்கத்தேவர் தன்னுடைய அரசியல் குருவாக கருதியவர் - வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரின் விருப்பத்திற்கேற்ப நேதாஜி 06.09.1939-ல் மதுரை வந்தார்.
நிலக்கிழார் ஒழிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்றார்.
சமபந்தி முறையை ஆதரித்தார்.
தேசியம் காத்த செம்மல் என இவரை திரு.வி. பாராட்டியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட்டு ஐந்துமுறை வெற்றி பெற்றார்.(1937,1946,1952,1957,1962)
தெய்வீகம் தேசியம் இரண்டையும் இருகண்களாக போற்றியவர்.
சிறப்பு பெயர்கள்: வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க கண்ட மாருதம், இந்து புத்த சம்ய மேதை.
*  1995ல் மத்திய அரசு இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.
தமிழக அரசு சென்னையில் இவருக்கு சிலையும், அச்சிலை இருக்கும் சாலைக்கு இவருடைய பெயரையும் சூட்டியுள்ளது.
முத்துராமலிங்க தேவர் தன்னுடைய சொத்துக்களை 17 பாகங்களாக பிரித்தார்.
*  17 பாக சொத்துக்களில் 16 பாகங்களை 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி வைத்தார்.
உப்பக்கம் என்றால் முதுகப்பக்கம் என்று பொருள்.
உம்பர் என்றால் மேலே என்று பொருள்.
உதுக்கண் - சற்றுத் தொலைவில் பார்.
கன்னியாகுமாரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட ஆண்டு - 2001 சனவரி-1.
**  இவரின் கூற்றுகள்:
சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை, ஆன்மீகத்ததிற்கும் இல்லை.
வீரமில்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும். பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு.
மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் என குறிப்பிட்டுள்ளார்.
மறைவு - 1936ஆம் ஆண்டு அக்டோபர் 30(பிறந்தநாள்)

No comments:

Post a Comment