Monday 25 February 2013

மொழிக் கல்வி பயிற்சித் திட்டம்



          மொழிக் கல்வியில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுபான்மை மொழியினர், மொழிப் பெயர்ப்பாளர்கள், மொழிக் கல்வியில் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து, 10 மாத மொழிக்கல்வி பயிற்சித் திட்டத்தில் சேர மத்திய மொழிக்கல்வி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில், ஏழு மண்டலங்கள் உள்ளன. இந்திய மொழிகள்
பற்றி பயிலும் திட்டம் இவற்றில் உள்ளது. மொத்த இடங்கள் 506. பல்வேறு பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு உண்டு. மைசூரில் தென் மண்டல மொழிகளின் மையம் செயல்படுகிறது. இங்கு கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
                      
தகுதிகள்: விண்ணப்பிப்போருக்கு, பயிற்சி பெற விரும்பும் மொழி பற்றிய முன்அறிவு இருக்கக் கூடாது. ஏற்கனவே எந்த மண்டல மையத்திலும் பயிற்சி எடுத்திருக்கக் கூடாது. மொத்த இடத்தில் 80 சதவீதம் அரசு/அரசு உதவிபெறும்/அரசு அங்கீகாரம் பெற்ற மேல்நிலைப்பள்ளிகளில், 3 ஆண்டு பயிற்சி அனுபவம் பெற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 10 சதவீத இடங்கள், சிறுபான்மை மொழி பேசும் பழங்குடியினர் பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 10 சதவீத இடங்கள் முதுநிலை பட்டதாரிகள், மொழியை முக்கிய பாடமாக கொண்ட பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுதேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அரசு நிர்ணயித்த மாத சம்பளம் வழங்கப்படும். மற்றவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் 5800 ரூபாய் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இயக்குனர், இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம், மானசகன்கோத்ரி, மைசூரு - 500 006 என்ற முகவரியில், 150 ரூபாய்க்கான டிடி உடன் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பித்து படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.
                         
இல்லையெனில், http://www.ciil.org/ என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை டவுண்லோடு செய்து அத்துடன் 150 ரூபாய்க்கான டிடி -யை இணைத்து விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் மார்ச் 31. மேலும் விவரங்களுக்கு 0821 234 5094, 0821 234 5156 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்
.

No comments:

Post a Comment