Tuesday, 26 February 2013

டி.இ.டி தமிழ் வினா - விடை: இசையமுது, பழமொழி நானூறு

எழுதியவர்பாரதிதாசன்
இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
சிறப்பு பெயர் - புரட்சிக்கவிஞர், பாவேந்தர்.
காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)
பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்
திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.
படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட
வீடு, குடும்ப விளக்கு.
கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.
கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.
இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.
பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.
யார் மீது கொண்ட காதலால் தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார் - பாரதியார் மீது கொண்ட காதலால்
** 
பொருள்: பொடி - மகரந்தப்பொடி, வானப்புனல் - வானத்து நீர்(மழை நீர்), தழையா வெப்பம் - பெருகும் வெப்பம், குறையாத வெப்பம், தழைக்கவும் - குறையவும்.
பழமொழி நானூறு:
ஆசிரியர் - முன்றுறை அரையனார், முன்றுறை - ஊர்ப்பெயர், அரையன் - அரசனைக் குறிக்கும் சொல்.
*  
பழமொழியில் உள்ள பாடல்கள் - 400
* * 
பொருள்:
ஆற்றுணா வேண்டுவது இல் -"கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்"
ஆற்றுணா - வழிநடை உணவு(கட்டுச்சோறு)
குறிப்பு: ஆறு - ஒர் எண்(6), ஆறு - நதி, ஆறு - வழி.
ஜவர்கர்லால் நேரு:
நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவர்கர்லால் நேரு
நேருவின் துணைவியார் பெயர் - கமலா
தாகூர் ஆரம்பித்த விஸ்வபாரதி கல்லூரி மேற்குவங்கத்தில் சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ளது.
நேரு தன் மகள் இந்திரா காந்திக்கும் 42 ஆண்டுகள்(1922-1964) கடிதம் எழுதியுள்ளார்.
பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும் போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது.
நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ளது. நேரு விரும்பி படித்தது - ஆங்கில நூல்கள்.
போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய்
அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து.
இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி.
தழை என்பதன் பொருள் - செடிகொடி.
**
குறிப்பு:
சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.
மில்டன் - ஆங்கில கவிஞர்.
பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர்.
காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்).
டால்ஸ்டாய் - இரஸ்ய நாட்டு எழுத்தாளர்(போரும் அமைதியும் நாவல் - உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார்.

பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்.
பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர், கல்வியாளர்(நேருவுக்கு மிகவும் பிடித்த கல்விச் சிந்தனையாளர்).
கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.
நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில்  அதிகம் கூறியது - நூல்கள் பற்றி.
**
குறிப்பு: உலகம் - ஞாலம், புவி - பூமி. முகில் - எழில், கொண்டல் - மேகம், மன்னன் - வேந்தன், கொற்றவன் -அரசன்.
இலக்கணம்:
ஓளியை உணர்த்தும் சொற்கள் இரண்டு இரண்டாக சேர்த்து வருவது, பிரித்தால் பொருள் தராது.
.கா: கண கண, சல சல, தணதண, பட பட, குடுகுடு, வளவள, பளபள.
சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள், இவர்கள் உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிப்பட்டவர்கள்.
*  "
வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் -கடுவெளிச் சித்தர்.
**
பொருள்:
சித்து - அறிவு
கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54.
நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் என்ப் பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகினிச் சித்தர் - இவை காரணப்பெயர்கள்.
**
பொருள்:
வேம்பு - கசப்பான சொற்கள்.
வீறாப்பு - இருமாப்பு, கடம் - உடம்பு. சாற்றும் - புகழ்ச்சியாக்ப் பேசுவவது.
கவிஞர் அப்துல் ரகுமானின் "ஆலா பனை" என்னும் நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.
இவரின் பிற படைப்புகள்- சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.
புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் - கவிக்கோ அப்துல்ரகுமான்.
தாகம் என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது -பால்
வீதி

No comments:

Post a Comment