தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில், "ஏ.பி.சி.டி" என, நான்கு வரையான, கிரேடு அங்கீகாரம் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. பள்ளிகள் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படுகிறதா,
விளையாட்டு, இதர கற்பித்தலில் ஈடுபாடு, ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம், நூலக வசதி, பள்ளியின் சுற்றுச்சூழல், வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்ட, 10 வகைகளில், ஒவ்வொன்றுக்கும், புள்ளிகள் தரப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தத்தில், பள்ளிகள் பெறும் புள்ளிகள் அடிப்படையில், "கிரேடு" வழங்கப்படும். அதன்படி, 76 புள்ளிகள் முதல், 100 வரை பெறும் பள்ளிகள், "ஏ" கிரேடு, 51-75 வரையிலான புள்ளிகளைப் பெறும் பள்ளிகளுக்கு, "பி" கிரேடு, 26-50 வரை பெறும் பள்ளிகளுக்கு, "சி" கிரேடு மற்றும் 26 புள்ளிகளுக்கு கீழே பெறும் பள்ளிகளுக்கு, "டி" கிரேடும் வழங்கப்படும் என, கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது. புதிய கட்டணங்களை நிர்ணயிக்க, தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கும் போது, மேற்கண்ட புள்ளி விவரங்களை, விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, கட்டண நிர்ணயக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment