** இலக்கணம்: சுட்டெழுத்துக்கள்- மனிதனையோ பொருளையோ சுட்டிகாட்ட உதவும் எழுத்துக்கள் சுட்டெழுத்துக்கள். அவை: அ, இ பழங்காலத்தில் உ (தற்போது பயன்படுத்துவது இல்லை)
எ.கா: அப்பெண், இப்பையன், இவ்வீடு, அந்தப்பக்கம், இந்தவீடு, அ, இ சுட்டெழுத்துக்கள் தனியே நின்று சுட்டும் போது ஆண்
பெண் அனைவரையும் பொதுவாக சுட்டுகின்றன.
* அகச்சுட்டு - அவன், இவன்
* புறச்சுட்டு - அப்பையன்
* சுட்டுத்திரிபு - அந்தப்பக்கம்.
* தகவலை வினா ஆக்கும் எழுத்து - ஆ
எ.கா: அவன் செய்தான் - அவனா செய்தான்?
* வினா எழுப்ப உதவும் வேறு சில எழுத்துக்கள் - எ-விடை என்ன? ஏ-ஏன் வந்தாய்? யா-யார் அங்கே ? யோ- நீயோ செய்தாய்?
* சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ
எ.கா: அவனோ செயதான், சீதையே சிறந்தவள்.
* தற்போது ஏ க்கு பதில் தான் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அவன் தான் சிறந்தவன்.
பொருள்:
* ஈரம்- அன்பு, அனைஇ-கலந்து, படிநு-வஞ்சம், அகன்-உள்ளம், அமர்-விருப்பம், செம்பொருள்-சிறந்த பொருள், துவ்வாமை-வறுமை, அல்லவை-பாவம், நன்றி-நன்மை, சிறுமை-துன்பம், ஈன்றல்-தருதல், வனகொல்-கடுஞ்சொல், கவர்தல்-நுகர்தல்.
No comments:
Post a Comment