Tuesday, 26 February 2013

ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணிகள் விரைவில் வழங்கப்படும்



                        அரசு .டி.., மாணவர்களுக்கு, இலவச சீருடை, காலணி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாகியும் அமலுக்கு வரவில்லை. தமிழகத்தில், 62 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் உள்ளன. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், இதில்
பயிலுகின்றனர். ஏழை, எளிய மாணவர்கள் அதிகளவில் கல்வி கற்பதால், பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை, மாணவர்களுக்கு அரசு அளிக்கிறது. இதில் ஒன்றான, இரண்டு சீருடைகள், ஒரு செட் காலணி வழங்கும் திட்டம், இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது, ஆண்டுக்கு, 4.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனரகம் மூலம், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
                 தொழில் பயிற்சி நிலையங்களின் மாணவர்கள் எண்ணிக்கை, காலணியின் அளவு உள்ளிட்ட தகவல்களை, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அளித்தன. ஆனால், இரண்டாண்டுக்கு மேலாகியும், திட்டம் கிடப்பிலேயே உள்ளது. இதுகுறித்து, தொழில் பயிற்சி நிலைய இணை இயக்குனர் ஒருவர் கூறுகையில், ".டி.., மாணவர்களுக்கு அரசு வழங்கி வரும், அனைத்து இலவச திட்டங்களும், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், இலவச சீருடை, காலணி வழங்கும் திட்டம், இன்னும் துவங்கப்படவில்லை. இரண்டு ஆண்டுக்கும் சேர்த்து சீருடை, காலணிகள் விரைவில் வழங்கப்படும்" என்றார்.-

No comments:

Post a Comment