Thursday 7 February 2013

பிளஸ் 2 தனி தேர்வு: சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்



              மார்ச்சில் நடக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வெழுத விரும்புபவர்கள்www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், 11ம் தேதி முதல், 13ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி கட்டணம், 1,000 ரூபாயுடன் சேர்ந்து, "எச்பி" வகை நேரடி தேர்வர்கள், 187 ரூபாயும், ஒரு பாடத்தை மட்டும் எழுதும், "எச்" வகை தேர்வர்கள், 85 ரூபாயும் செலுத்த வேண்டும்இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பணசெலுத்துகை சீட்டு மட்டுமே, தேர்வு கட்டணம் செலுத்த பயன்படுத்த வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள தொகையை, 14ம் தேதிக்குள், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும், "அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6" என்ற பெயரில் செலுத்த வேண்டும்
                            இணையதளத்தில் பூர்த்தி செய்து புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட  விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் தனித்தேர்வர்கள், வரும், 22ம் தேதி மற்றும் 23ம் தேதி, அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பித்து, அனுமதி சீட்டை பெற்று கொள்ள வேண்டும்விண்ணப்பத்தில், தாங்கள் கடைசியாக படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும். மேலும் விவரங்களை,www.tn.gov.in/dge என்ற இணையதளத்தில் இருந்து பெறலாம்.

No comments:

Post a Comment