Tuesday 5 February 2013

பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தேவையான தட்டு மற்றும் டம்ளர்கள் கடந்த, 30 ஆண்டுகளாக வாங்கப்படவில்லை.



                         பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தேவையான தட்டு மற்றும்டம்ளர்கள் கடந்த, 30 ஆண்டுகளாக வாங்கப்படவில்லை. வீட்டிலிருந்தே தட்டுகொண்டு வந்து சாப்பிடமாணவர்கள் சங்கடப்படுகின்றனர். இதையடுத்து, சத்துணவு வழங்க, 62 
லட்சம் தட்டு மற்றும் டம்ளர்கள் தேவை எனஅரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 1982 - 83ம் கல்வியாண்டில், பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டத்தைமுன்னாள் முதல்வர்எம்.ஜி.ஆர்., தொடங்கி வைத்தார். அப்போதுஅரசு மற்றும் அரசு உதவி பெறும், 35 ஆயிரம் பள்ளிகளில்இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
                            "
வெரைட்டி ரைஸ்இதற்காகஒரு மாணவனுக்கு, 10 ரூபாய் என்ற அடிப்படையில்,அலுமினிய தட்டுடம்ளர் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்கி கொள்ளஉத்தரவிடப்பட்டது. தற்போது, 43 ஆயிரம் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வரும், சத்துணவு திட்டத்தின் மூலம், 52 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். 1ம்வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை, 25 லட்சம் மாணவர்களும்; 6ம் வகுப்பு முதல், 10ம்வகுப்பு வரை, 16 லட்சத்து, 38 ஆயிரம் மாணவர்களும் சத்துணவு சாப்பிட்டுவருகின்றனர். இவர்கள் தவிரதேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்டத்தின் கீழ், 12 ஆயிரம் பேரும், 18 ஆயிரம் முதியவர்களும் சத்துணவு திட்டத்தின் மூலம்,பயனடைந்து வருகின்றனர். சத்துணவு திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில்,விரைவில், "வெரைட்டி ரைஸ்என்ற திட்டத்தையும் அமல்படுத்ததமிழக அரசுநடவடிக்கை எடுத்து வருகிறது. தட்டுடம்ளர்கள் வாங்க : இந்நிலையில்,பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்குபோதிய அளவில் தட்டுகள்,டம்ளர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திட்டம் ஆரம்பிக்கப்பட்ட, 1982ம் ஆண்டுஅலுமினிய தட்டுடம்ளர்மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்கிக் கொள்ளநிதி ஒதுக்கப்பட்டது. அதன் பின்ஒவ்வொரு ஆண்டும்சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கு மட்டும்நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால்தட்டு,டம்ளர்கள் வாங்கமுழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. சத்துணவு ஊழியர் ஒருவர் கூறியதாவதுவருகை பதிவேட்டுக்காக... சில மாணவர்கள், வருகை பதிவேட்டுக்காக சத்துணவு சாப்பிடுகின்றனர். இதற்காக,வீட்டில் இருந்து சிறிய தட்டு எடுத்து வருகின்றனர். முட்டையுடன்,சத்துணவு வாங்கிமுட்டையை மட்டும் சாப்பிடுகின்றனர். சாப்பாட்டை அப்படியே கொட்டி விடுகின்றனர். இதனால் சத்துணவு வீணாகிறது. இவ்வாறு அவர் கூறினார். சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த பிரச்னை குறித்துல எங்கள் கவனத்துக்கும் வந்தது. 62 லட்சம் தட்டு மற்றும் டம்ளர்கள் வாங்க வேண்டியிருப்பதாகவும்இதற்காக, 16 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும்அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளோம். விரைவில் அரசு தரப்பில் நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment