Tuesday 19 February 2013

டான்செட் நுழைவுத்தேர்வு: 34,376 ஹால் டிக்கெட் வினியோகம்



            டான்செட் நுழைவுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் தமிழகம் முழுவதும் கடந்த 16ம் தேதி வரை 34 ஆயிரத்து 376 மாணவர்கள் பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் நேற்று மாலை வரை 5,700 மாணவர்கள் பெற்றுள்ளனர்அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்
பொறியியல்,தொழில்நுட்ப கல்லூரிகளில் எம்.பி.., எம்.சி..,எம்..,மற்றும் எம் டெக் பாடப்பிரிவுகளில், அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு டான்செட் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதற்கான நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் 6ம் தேதி முதல் வருகின்ற 26ம் தேதி வரை வினியோகிக்கப்படுகிறது. கோவை மண்டலத்தின் மையமாக தடாகம் ரோட்டில் உள்ள ஜி.சி.டி., கல்லூரியில் மாணவர்கள் ஆன் - லைன் முறையில் பதிவு செய்துள்ளனர்.
                                 இதுகுறித்து கல்லூரி முதல்வர் லட்சுமி பிரபா கூறுகையில், "கடந்த 16ம் தேதி வரை எம்.பி. பிரிவில் 13 ஆயிரத்து 362 மாணவர்களும், எம்.சி. பிரிவில் 5 ஆயிரத்து 555 மாணவர்களும், எம். பிரிவிற்கு 17 ஆயிரத்து 200 மாணவர்களும் தமிழகம் முழுவதும் பதிவு செய்துள்ளனர்இத்தேர்வுகள் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் நடக்க உள்ளது. மேலும் வருகின்ற 26ம் தேதி வரை ஆன்-லைன் முறையில் மாணவர்கள் ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்,'' என்றார்.

No comments:

Post a Comment