Wednesday 13 February 2013

முந்தைய அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட 55 ஆயிரம் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை, பணி வரன்முறைப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


முந்தைய .தி.மு. ஆட்சி காலத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட, 55 ஆயிரம் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை, பணி வரன்முறைப்படுத்த, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.கடந்த, 2004-06 வரை, இடைநிலை ஆசிரியர், 10 ஆயிரம் பேர், முதுகலை ஆசிரியர், 10 ஆயிரம் பேர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 35 ஆயிரம் பேர் என, 55 ஆயிரம் பேர், தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டனர். மாதம், 3,000 ரூபாய் முதல், 4,500 ரூபாய் வரை சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த இவர்கள், தி.மு.., ஆட்சி காலத்தில், பணி வரன்முறை செய்யப்பட்டனர்.
               
எனினும், 2004-06 வரையான, 2 ஆண்டுகள், பணி வரன்முறைக்குள் வரவில்லை. பணி வரன்முறை செய்த தி.மு.., அரசே, தொகுப்பூதிய காலத்தையும், பணிவரன்முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில், பணி நியமனம் செய்த அரசே, இப்போதும் இருப்பதால், தொகுப்பூதிய காலத்தை,
பணி வரன்செய்ய, முதல்வர் முன்வர வேண்டும் என, 55 ஆயிரம் ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன், கூறுகையில், ""இரண்டு ஆண்டுகளை, பணிவரன்முறை செய்யாவிட்டால், பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், தேர்வு நிலை, சிறப்புநிலை அடைய, கூடுதலாக, இரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.''என்றார்

No comments:

Post a Comment