Friday 15 February 2013

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சம்பளம் காலத் தாமதமாகிறதா?



          தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் மாதந்தோறும் சம்பளம் பெறுவதில் சிரமம் நிலவுகிறது. பல ஆண்டுகளாக காலியாக இருந்த கம்ப்யூட்டர், ஓவியம், உடற்கல்வி, இசை உட்பட பணியிடங்களுக்கு, மாதம் ரூ.5000 சம்பளம் அடிப்படையில் 15 ஆயிரம் பேரை பகுதிநேர ஆசிரியர்களாக
சில மாதங்களுக்கு முன் அரசு நியமித்தது. இவர்களுக்கு மாதத்தில் 12 அரை நாட்கள் பணி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதம் முடிவிலும் அவர்களின் வருகை குறித்து, சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், கணக்கெடுத்து அதற்கான வருகை விபரத்தை, மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு (அனைவருக்கும் கல்வி திட்டம்) அனுப்புவர். அங்கு பணிச்சுமையால் வருகை விவரம் சம்பள "லிஸ்ட்'டுக்கு உடனடியாக ஒப்புதல் கிடைக்காததால், சம்பளம் கிடைப்பது தாமதமாகிறது. ஒவ்வொரு மாதமும் 20 ம் தேதிக்கு பின் தான் இந்த ஆசிரியர்களுக்கு கையில் சம்பளம் கிடைக்கிறது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் பிரபாகரன் கூறியதாவது: பகுதிநேர பணியாக அரசே நியமித்ததால், பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றியவர்கள்கூட, அப்பணியை ராஜினமா செய்துவிட்டு, இந்த வேலைக்கு வந்தனர். பணி நிரந்தரமாகும் நம்பிக்கையில், ரூ.5,000 சம்பளத்திற்கு வேலையில் உள்ளனர். அதைகூட அவர்கள் உரிய நேரத்தில் பெறமுடியவில்லை. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், தலைமையாசிரியர்கள் ஒப்புதல் அளித்தாலே சம்பளம் வழங்கும் வகையில் நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும், என்றார்

No comments:

Post a Comment