Tuesday 19 February 2013

புதுவைப் பல்கலை: பதிவாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு



            புதுவைப் பல்கலைக்கழகத்தில், காலியாக உள்ள பதிவாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனமுதுகலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 வருடம் உதவி பேராசிரியர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 8
வருடம் துணை பேராசிரியர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 62 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களைwww.pondiuni.edu.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுப்பிரிவினருக்கு ரூ.300ம், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இலவசம்.
                      பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை புதுவைப் பல்லைக்கழகம், ஆர்.வெங்கடராமன் நகர், புதுச்சேரி - 605 014. என்ற முகவரிக்கு மார்ச் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.pondiuni.edu.in/news/recruitment-post-registrar என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment