Monday 18 February 2013

மாணவர்களுக்கு அரசு சலுகைகள்: அமைச்சர் பெருமிதம்



              ஒழுக்கமும், பண்பாடும் மிக்க மாணவர்களை உருவாக்கவே தமிழக அரசு பாடுபடுகிறது என்று தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி கூறினார். திருச்செங்கோடு அரசு  ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் அவர் பேசியது: அரசுப் பள்ளிகளில் சேர்க்கை விகிதம், தேர்ச்சி விகிதம்
குறைந்து வருகிறது. இதைத் தவிர்க்கவே தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வித் துறை சார்பில் ஊக்கப் பயிலரங்கு நடத்தப்படுகிறது. கல்வித் துறைக்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. மாணவர்கள் கல்வி பயில்வதில் எந்தவிதமான இடையூறும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் 14 வகையான சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. மாணவ, மாணவிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒழுக்கமும், பண்பாடும் மிக்க மாணவர்களை உருவாக்கவே தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றார் அமைச்சர்விழாவில் தலைமை ஆசிரியர் லோகநாதன்  ஆண்டறிக்கை வாசித்தார்.
          முதன்மைக் கல்வி அலுவலர் வை. குமார், நகர் மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் பாலசுப்ரமணியம், மல்லசமுத்திரம் மோகன், துணைத் தலைவர் எவரெஸ்ட் குமரவேல்  உள்ளிட்ட பலர் பேசினர். பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கண்ணையன், நகர் மன்ற உறுப்பினர்கள் பொன். விஜயராஜ், இரா. முருகேசன்விஜயலட்சுமி லோகநாதன், சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சாதனை மாணவர்களுக்கும் அமைச்சர் தங்கமணி பரிசுகளை வழங்கினார்உதவித் தலைமை ஆசிரியர் செங்கோடன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment