Monday, 18 February 2013

தேசிய அளவிலான யோகா போட்டி:அரசு பள்ளி மாணவன் முதலிடம்



            அந்தமானில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியில், அரசு பள்ளி மாணவன் முதலிடம் பெற்றார். இந்திய யூத் யோகா பெடரேஷன் மற்றும் ஆசிய ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் ஆகியன இணைந்து இம்மாதம் 2ம் தேதி அந்தமானில் தேசிய அளவிலான யோகா போட்டிகளை
நடத்தியது. இதில், துடியலூர் அருகே தொப்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர் பிரதீப், 13; கலந்து கொண்டார். இவர், 14 வயதுக்குட்பட்ட பொது பிரிவில், முதலிடம் பிடித்து சான்றிதழ் மற்றும் கேடயம் வென்றார். மாணவனுக்கான பாராட்டு விழா, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி, தலைமை வகித்தார். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவனுக்கு பள்ளி தலைமை ஆசிரியை யசோதா, கிராம கல்வி உறுப்பினர்கள் ஆறுமுகம், மாணிக்கம் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment