Wednesday 6 February 2013

டான்செட் நுழைவுத்தேர்வு: ஆன்-லைனில் ஹால் டிக்கெட் வினியோகம்



          டான்செட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வினியோகம், தமிழகம் முழுவதும் 15 மையங்களில் ஆன்-லைன் முறையில் இன்று துவங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல்,
தொழில்நுட்ப கல்லூரிகளில், எம்.பி.., - எம்.சி.., - எம்.., மற்றும், எம்.டெக்., பாடப் பிரிவுகளில், அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு, டான்செட் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றனவரும் ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதிகளில், நடைபெறவுள்ள இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று முதல், வரும் 26ம் தேதி வரை, வினியோகிக்கப்படுகிறதுகூடுதல் விவரங்களுக்கு  http://www.annauniv.edu/tancet2013/  என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment