17.02.2013 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ்
ஆசிரியர்களுக்கு தேவையான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் மாவட்ட தேர்தல் நடைப்பெற்றது. இதில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டர்கள் மாநில பொது செயலாளர் திரு அ.வ.அண்ணாமலை அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான தீர்மானங்கள்1.உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 50% பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கும் 50% நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் ,
2.அரசாணை எண் 720 ஐ எந்த காரணம் கொண்டும் திருத்தம் செய்யக் கூடாது என்றும்,
3. மாணவர் நலன் கருதி அனைத்து மேல் நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வரை உள்ள வகுப்புகளை நிர்வாகம் செய்ய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் ஒன்று உருவாக்கி அதில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50% பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment