Sunday 3 February 2013

சம்பள முரண்பாட்டை நீக்க சிறப்பாசிரியர்கள் வலியுறுத்தல்


              அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் சம்பளத்திற்கும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்களுக்கும் உள்ள சம்பள முரண்பாட்டை நீக்க வழிவகை செய்யும், அரசாணை 216, கல்வித்துறை அமல்படுத்த வேண்டும் என, உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளி பணி ஓய்வு இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்க பொதுச்செயலர் மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, 1988, ஜூன் 1 வரை, அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்களும், ஒரே சம்பளத்தை பெற்று வந்தனர்.
                                
அனைவரும் ஒரே கல்வித் தகுதியை பெற்றிருக்கின்றனர். மத்திய அரசு அமைத்த, ஐந்தாவது ஊதியக் குழு அமலுக்கு வந்த போது, ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சம்பளம் மட்டும் மாறியது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, சிறப்பாசிரியர் சம்பள விகிதத்தில், இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த முரண்பாட்டை நீக்க வேண்டும் என, தெரிவித்து, 1993ல், தமிழக அரசு, அரசாணை 216 வெளியிட்டதுஅரசு உத்தரவிட்டும், கல்வித் துறை மட்டும் அசைந்து கொடுக்காமல் உள்ளது. 216 அரசாணையை அமல்படுத்தக் கோரி, 4ம் தேதி, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து, கோட்டை நோக்கி, கவன ஈர்ப்பு பேரணி நடத்த உள்ளோம்.இவ்வாறு, நிர்வாகிகள் கூறினர்
.

No comments:

Post a Comment