Friday 1 February 2013

இடஒதுக்கீடு கொள்கைக்கு முரணான ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி டில்லியில் போராட்டம்



         நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டில்லியில் நாடாளு மன்றம் முன்பு ஏப்ரல் 4ஆம் தேதி மறியலில் ஈடுபட அகில இந்திய ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. மறியலில் தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி சார்பில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் முத்துராமசாமி கூறிய தாவது : பீகார், உத்தரபிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் 9ஆம் வகுப்பு மற்றும் எஸ்எஸ்எல்சி., முடித்தவர்கள் ஒப்பந்த பாரா ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற ஆசிரியர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கட்டாயம் தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு சரியானது தான். அதன் அடிப்படையில் தான் அந்தந்த மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி வருகிறது.
                              
தமிழகத்தை பொறுத்தவரை ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தேவையில்லாதது. ஏனெனில், தமிழகத்தி லுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதிக்கான பட்டம் மற்றும் பட்டயப்படிப்பை முடித்தவர்களே ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு முரண்பாடானது.
தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை கட்டாயம் ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 6ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களையும் வலி யுறுத்தி ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி டில்லியில் நாடாளுமன்றம் முன் எங்களது தலைமை இயக்கமான அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய பொது செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மறியல் போராட்டம் நடக் கிறது. மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு முத்துராமசாமி தெரிவித்தார்
.

No comments:

Post a Comment