Saturday, 2 February 2013

பிசினஸ் ஸ்கூல் பட்டதாரிகளில் 10% பேருக்கு மட்டுமே பணிவாய்ப்பு?



                இந்தியாவில் பிசினஸ் ஸ்கூல் எனப்படும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கான மவுசு குறைந்து வருவதாக அசோசெம் தெரிவித்துள்ளது இதுதொடர்பாக அசோசெம் நடத்திய ஆய்வில் ஐஐஎம் போன்ற முன்னணி 20 மேலாண்மைக் கல்வி நிறுவனங்களைத் தவிர, பிற கல்வி
நிறுவனங்களில் பயிலும் பட்டதாரிகளில் வெறும் 20% பேர் மட்டுமே இந்திய கார்பரேட் நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது எனத் தெரியவந்துள்ளது. அசோசெம் (Assocham) நிறுவன ஆய்வில், கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி.. படிப்பை  முடிக்கும்  மாணவமாணவிகளின்  எண்ணிக்கை, 3 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது எனினும், வளாகத் தேர்வில் எம்.பி.. பட்டதாரிகளுக்கான தேவை சுமார் 40% வரை குறைந்து விட்டதாகவும் அசோசெம் ஆய்வு தெரிவிக்கிறது.
                              இதுமட்டுமின்றி, கடந்த (2012) ஆண்டு, எம்.பி.. படிப்பை வழங்கும்  சுமார் 180 மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதாகவும், இந்த ஆண்டு மேலும் 160 கல்வி நிறுவனங்கள் மூடப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை  ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்த போது, பெரும்பாலான மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில், படிப்பை  பயிற்றுவிப்பதற்கு  போதிய  கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், ஒரு முக்கிய காரணம் எனத் தெரியவந்ததுகடந்த 2008ம் ஆண்டில் 54% ஆக இருந்த பிசினஸ் ஸ்கூல் பட்டதாரிகளின்  பணி  வாய்ப்பு தற்போது 10% என்ற அளவுக்கு சரிந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுபற்றி மனிதவள மேம்பாட்டுத்துறை உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மேலும் பல மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதை தடுக்க முடியும் என  கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment