Thursday 14 February 2013

காலியிடம் நிரப்பக்கோரி ஆசிரியர் கூட்டணி 20ம் தேதி ஆர்ப்பாட்டம்



         புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு இடை நிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை தமிழக இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம். அனைத்து துறைகளிலும்
காலியாக உள்ள பணியிடங் களை நிரப்ப வேண்டும். வரு மான வரி உச்சவரம் பினை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண் டும். ஓய்வூதியம், தொழிலாளர் கள் காப்பீட்டு உறுதித் திட் டம், பங்கு சந்தையில் முதலீடு செய்யும் மத்திய கொள்கை முடிவை கைவிட வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக ஆசி ரியர் கூட்டணியினர் முடிவு செய்துள்ளனர். இதன்படி திருச்சி மாவட்டத்தில் காதிகிராப்ட் முன்பு நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஐபெட்டோ பொதுச் செயலாளர் அண் ணாமலை பங்கேற்கிறார்.
            மத்திய அரசைக் கண் டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 20, 21 தேதிக ளில் ஸ்டிரைக்குக்கு தமிழக ஆசிரியர் கூட் டணி மற்றும் அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) ஆதரவு தெரிவிக்கிறது. இதனை ஐபெட்டோ மாவட்ட செய லாளர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்
.

No comments:

Post a Comment