Thursday 14 February 2013

வருமான வரி உச்ச வரம்பினை ரூ.5 லட்சமாக்க வேண்டும் தலைமை ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்



                          வருமான உச்ச வரம்பினை ரூ.5 லட்சமாக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைமை ஆசிரியர் கூட்டணி அரியலூர் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் அரியலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட
தலைவர் தனசேகரன் தலைமையில் நடை பெற்றது. ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நம்பி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி, மாவட்ட துணைத் தலைவர் தங்கசாமி, கருணா கரன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் வட்டார கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம்
*
பிப்ரவரி 20, 21ந் தேதிகளில் மத்திய தொழிற் சங்கங்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர் கள், வங்கி பணியாளர்கள் இணைந்து நடத்தும் போராட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு முடிவுப்படி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
*
அரியலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது.
ரூ.5 லட்சமாக்க வேண்டும்
*
வருமான வரி உச்ச வரம்பினை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
*
மத்திய அரசு போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் 20 ஆண்டு பணிக்காலத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
*
ஓய்வூதியம், தொழிலாளர் காப்பீட்டு உறுதி திட்டம், பங்கு சந்தையில் முதலீடு செய்யும் மத்திய அரசின் கொள்கை முடிவினை கைவிட வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வு
*
கற்பித்தல் திறனுக்கும், ஆசிரியர் தகுதி தேர்விற்கும் தொடர்பில்லை. எனவே ஆசிரியர் தகுதி தேர்வினை ரத்து செய்துவிட்டு வேலை வாய்ப்பக

பதிவுமூப்பின்படி பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
*
பணி நியமனம் செய்யப் பட்ட பின்னர் கல்வி உரிமை சட்டப்படி தகுதித் தேர்வினை 5 ஆண்டுகளுக்குள் முடிக்கும் வாய்ப்பினை அவர்களுக்கு அனுமதிக்க வேண்டும்.
*
தற்போதுள்ள தேர்ச்சி மதிப்பெண் 90 சதவீதம் என்பது 75 சதவீதமாக குறைக் கப்பட வேண்டும். ஆகஸ்டு 2010க்கு பிறகு நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு உதவி பெறும் பள்ளி களில் நியமனம் செய்யப் பட்டவர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி படுத்தப்பட வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
மேற்கண்டவை உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
.

No comments:

Post a Comment