Wednesday 6 February 2013

இ.பி.எப்., வட்டி வீதம் 8.5 சதவீதமாக்க மத்திய அரசு திட்டம்?



            நடப்பு நிதியாண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தை, 8.5 சதவீதமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவதுதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, முந்தைய நிதியாண்டில், 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், இந்த வட்டியை அதிகரிக்க வேண்டும்
என, தொழிலாளர்கள் தரப்பில், கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின், மத்திய அறக்கட்டளை வாரிய (சி.பி.டி.,) கூட்டம், வரும், 15ம் தேதி நடக்கவுள்ளது. அதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும். நடப்பு நிதியாண்டுக்கான வட்டி வீதம், 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment