Saturday 16 February 2013

அரசு தொடக்கப்பள்ளியில் ஆங்கிலவழி கல்விக்கு பரிந்துரை



                          தர்மபுரி மாவட்டத்தில், 100 அரசு தொடக்கப்பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில வழி கல்வி மீது மோகம் ஏற்பட்டதால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை
ஆண்டுக்கு, ஆண்டு சரிந்து வருகிறது. குறிப்பாக கிராமங்கள் முதல் பெரும் நகரம் வரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை சதவீதம் குறைந்துள்ளதால், பெரும்பலான பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர். அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை பெருக்கவும், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர பெற்றோர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு முடிவு செய்தது. நடப்பாண்டில் தர்மபுரி மாவட்டத்தில், ஐந்து ஆங்கில வழி கல்வி துவக்கப்பள்ளியில் துவங்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளததை அடுத்து வரும், ஆண்டில் மாநிலம் முழுவதும் கூடுதல் ஆங்கில வழி கல்வி துவக்கப்பள்ளிகளை துவங்க முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment