Friday 15 February 2013

தாவரவியல் பட்டியல் தயார், எந்நேரமும் வெளியாக வாய்ப்பு! தமிழ் வழி ஒதுக்கீட்டு பட்டியலால் தாமதம் - டி.ஆர்.பி


         தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாவரவியல் பாடத்திற்கான முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. போட்டித் தேர்வு அடிப்படையில், தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் 2,300 பேர், கடந்த டிசம்பரில், பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இவர்கள், பணியில் சேர்ந்து, இரண்டு மாதம், சம்பளமும்
பெற்றுவிட்டனர். ஆனால், இவர்களுடன் தேர்வெழுதிய தாவரவியல் பாட தேர்வர்களுக்கு, இதுவரை, இறுதிப்பட்டியல் வெளியிடப்படவில்லை. தவறுதலான கேள்விகள் விவகாரம் தொடர்பாக, சென்னை, ஐகோர்ட் உத்தரவின்படி, விடைத்தாள்களை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து, இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது. 195 பேர் வரை, இந்தப் பாடத்தில் தேர்வு செய்யப்படலாம் என, கூறப்படுகிறது.
                      
தமிழ்வழி படித்தவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 200 இடங்களுக்கான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: தாவரவியல் பட்டியல் தயாராகிவிட்டது; எந்நேரமும் வெளியாக, வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழ் வழி ஒதுக்கீட்டு பட்டியல், இன்னும் தயாரிக்கப்படவில்லை. முதுகலையில், எந்தெந்த கல்லூரிகளில், எந்தெந்த பாடங்களில், தமிழ் வழிப் பிரிவு உள்ளது என்ற விவரங்களை, பல்கலைகளிடம் கேட்டோம்; இதுவரை பதில் வரவில்லை; பதில் வந்தால் தான், நாங்கள் இறுதிப்பட்டியல் தயாரிக்க முடியும். பொருளியல், வரலாறு மற்றும் வணிகவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் சேர்த்து, 200 இடங்கள் வரை, நிரப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன
.

No comments:

Post a Comment