Friday 8 February 2013

பத்தாம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் அரையாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட சில சந்தேகங்களுக்கு தேர்வுத்துறை இயக்ககத்தால் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது .



                     நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வின் வினாத்தாளில் ஏற்பட்ட சில சந்தேகங்களுக்கு கீழ்வரும் தெளிவுரை வழங்கப்படுகிறது.
சந்தேகம் -1

       
பிரிவு- -வில் இடம்பெறும் 15 வினாக்களும் பத்தாம்
வகுப்பு கணிதப்பாட நூலின் ஒவ்வொரு அலகின் முடிவிலும் தொகுத்தளிக்கப்பட்டுள்ள வினாக்களிலிருந்து மட்டுமே கேட்கப்படுமா?
பதில் :     ஆம்.

சந்தேகம் -2

   
பிரிவு- மற்றும் பிரிவு - ஆகிய பகுதிகளில் முதல் 14 வினாக்களில், பாடப்புத்தகத்திற்கு வெளியிலிருந்து கேட்கப்படும் இரு வினாக்களும் அடங்கும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு கேட்கப்படும் இரு வினாக்களும் மெய்யெண்களின் தொடர் வரிசைகளும் தொடர்களும், இயற்கணிதம், ஆயத்தொலை வடிவியல் மற்றும் அளவியல் ஆகிய 4 பாடப்பகுதியிலிருந்து மட்டுமே கேட்கப்படுமா?
பதில் :  அவசியம் இல்லை. அனைத்து பாடப்பகுதியிலிருந்தும் கேட்கப்படலாம்.

சந்தேகம் : 3

   
பிரிவு- மற்றும் பிரிவு- ஆகிய பகுதிகளில் இடம்பெறும் கட்டாய வினாக்கள்( 30a, b ; 45a, b) பாடநூலில் உள்ள வினாக்களிலிருந்து கேட்கப்படும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவ்வினாக்கள் மெய்யெண்களின் தொடர் வரிசைகளும் தொடர்களும், இயற்கணிதம், ஆயத்தொலை வடிவியல் மற்றும் அளவியல் ஆகிய 4 பாடப்பகுதியிலிருந்து மட்டுமே கேட்கப்படுமா?
பதில் :  அவசியம் இல்லை. அனைத்துப் பாட பகுதியிலிருந்தும் கேட்கப்படலாம்.

சந்தேகம் :4

   
வினாத்தாளின் பிரிவு-, பிரிவு- மற்றும் பிரிவு- ஆகிய பகுதிகளில் கேட்கப்படும் எடுத்துக்காட்டு மற்றும் பயிற்சி கணக்குகளின் எண்ணிக்கையில் மாற்றம் உள்ளதா?
பதில் :  எடுத்துக்காட்டுகள் மற்றும் பயிற்சி கணக்குகளின் எண்ணிக்கையில் எந்தவித நிபந்தனையின்றி எந்த எண்ணிக்கையிலும் கேட்கப்படலாம்.

சந்தேகம் 5:

   
பிதாகரஸ் தேற்றத்தின் நிரூபணம் சில மாவட்டங்களில் நடைபெற்ற மாதிரி தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் பயிற்சி காலங்களின் போது சில மையங்களில் நிரூபணம் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே, பிதாகரஸ் தேற்றத்தின் நிரூபணம் தேர்வுக்கு இடம் பெறக்கூடிய பகுதியில் உள்ளதா?
பதில் :  ஆம்
.

No comments:

Post a Comment