Sunday 10 February 2013

தனியார் பள்ளிகளை தேடிச் செல்லும் பெற்றோர்: கல்வியாளர்கள் வேதனை



                 "பெற்றோர், தனியார் பள்ளிகளை தேடிச் செல்வது, துரதிஷ்டமானது, தமிழகத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து, நாம் கேள்வி எழுப்ப வேண்டிய சூழலில் உள்ளோம்" என, முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி கூறினார்தமிழக குழந்தைகளின் கல்வித்தரம் குறித்து,
"அசர்&' என்ற தனியார் அமைப்பு, நடத்திய ஆய்வறிக்கையின் வெளியீட்டு விழா, சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில், இந்து நாளிதழ் ஆசிரியர், சித்தார்த் வரதராஜன், கல்வியாளர் ராஜகோபால், எழுத்தாளர் ஞானி, மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன், முன்னாள் துணைவேந்தர், வசந்திதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், வசந்திதேவி பேசியதாவது: தமிழக குழந்தைகளின் கல்வித் திறன் குறைந்து வருவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் கல்வி குறித்து,வரும் ஆய்வறிக்கைகளே அதற்கான சாட்சி
                          தற்போது வெளி வந்துள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் மட்டுமல்ல; நாடு முழுக்க, பெற்றோர், தங்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கே, முன்னுரிமை கொடுக்கின்றனர். இது தவறானதுதனியார் பள்ளிகளில் பயிலும், மாணவர்களின் கல்வித் தரத்தை விட, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரம், எந்த வகையிலும் குறைந்தது இல்லை. அனைத்து பெற்றோரும், தங்கள் குழந்தைகள் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்து, தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஆனால், அப்பள்ளிகள், குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதில்லை. தற்போது வெளிவந்துள்ள ஆய்வறிக்கையின் படி, ஒன்றாம் வகுப்பில் படிக்கும், 43.4 சதவீத குழந்தைகளால் மட்டுமே, தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறது. 2ம் வகுப்பு படிக்கும், 43.6 சதவீத குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது
                       5ம் வகுப்பு படிக்கும், 29.9 சதவீத குழந்தைகளால் மட்டுமே, 2ம் வகுப்பு கதைகளை வாசிக்க முடிகிறது. தமிழை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில், தமிழ் எழுத்துக்களை கூட, மாணவர்களால், வாசிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் எனில், தமிழகத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து, நாம் கேள்வி எழுப்ப வேண்டிய சூழலில் உள்ளோம்மயக்கத்தில் இருந்து, பெற்றோர் தெளிவு பெற வேண்டும். அவர்கள் தனியார் பள்ளிகளை, தேடிச் செல்வது துரதிஷ்டமானது.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment