Thursday 21 February 2013

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிநியமனம் இழுபறி



           அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் பணி நியமனம், 4 மாதங்களாக, இழுபறியில் உள்ளது. தேர்வு பெற்றவர்கள், எப்போது வேலை கிடைக்கும் என, தெரியாமல் தவித்து வருகின்றனர். அரசு
பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்களை பணி நியமனம் செய்வதற்கு, கடந்த ஆண்டு, மே, 13ல், டி.ஆர்.பி., தேர்வை நடத்தியது. பின், ஜூலை, 8ல், தேர்வு முடிவை வெளியிட்டு, ஒரு இடத்திற்கு, இருவர் வீதம், அதே மாதத்தில், 22 மற்றும் அக்டோபர், 4 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியது. கடந்த ஆண்டு, அக்டோபர், 18ம் தேதி, இறுதி தேர்வுப் பட்டியல் வெளியானது.
                                
இதேபோல், அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு, கடந்த ஆண்டு ஏப்ரல், 22ல் நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், அக்டோபர், 18ல், தேர்வுப் பட்டியல் வெளியானது. இரு தேர்வுகளிலும், தேர்வு பெற்ற தேர்வர்களின் விவரங்களை, உயர்கல்வித்துறைக்கு, டி.ஆர்.பி., அனுப்பியது. எனினும், 4 மாதங்களாக, இவர்களுக்கு பணி நியமனம் வழங்க, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்குள், அனைவரையும் பணி நியமனம் செய்ய, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்வு பெற்றவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்
.

No comments:

Post a Comment